
தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளரான சிவாஜிலிங்கம் ஐயாவின் மறைவைத் தொடர்ந்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டம், பசார் வீதி, குருமன்காடு மற்றும் மன்னார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கறுப்புக்கொடிகள் ஏற்றப்பட்டு அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டில் நீண்டகாலம் ஈடுபட்டிருந்த சிவாஜிலிங்கம் ஐயாவின் மறைவையொட்டி, அவரது இழப்பை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












