
2027 வரவு–செலவுத் திட்டத்தின் சமூக வலுவூட்டல், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி / கடற்றொழில் துறைகள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் வெள்ளிக்கிழமை (27.11.2026) ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உரையாற்றினார்.
அஸ்வெசும திட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 525 பேரை மட்டுமே விரிவுபடுத்துவது போதுமானதல்ல என்றும், நிறுத்தப்பட்ட கொடுப்பனவுகளை மீள வழங்க வேண்டும்.
குறிப்பாகத் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா, மூதூர், தோப்பூர், கந்தளாய், குச்சவெளி, புல்மோட்டை ஆகிய பிரதேசங்களில் விசேட கவனம் செலுத்துமாம் கோரிக்கை விடுத்தார்
4% வட்டியில் 5,000 மில்லியன் ரூபாய் கடன் வழங்கும் திட்டத்தில், குறைந்தது 5 அஸ்வெசும பயனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனை கிராமிய சிறு வியாபாரிகளுக்கு நடைமுறைச் சாத்தியமற்றது எனக் கூறி, அந்நிபந்தனையை நீக்கி எளிமையாகக் கடன் கிடைக்க வழிசெய்ய வேண்டும் .
சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை ரூ. 10,000-லிருந்து ரூ. 12,500 ஆக உயர்த்தியதை வரவேற்றாலும், ஒரே நோய்க்கு மத்திய அரசு மற்றும் மாகாண சபை ஊடாக வெவ்வேறு தொகை வழங்கப்படுவது அநீதியானது எனக் கூறி சமப்படுத்துமாறு சுட்டிக்காட்டினார்.
பொதுசன மாதாந்த உதவித் தொகை (ரூ. 250 – ரூ. 500) இன்றைய வாழ்க்கைச் செலவுக்குப் போதுமானதல்ல எனச் சுட்டிக்காட்டி, குறைந்தது ரூ. 5,000 ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் கோரினார்.
நெத்தலிக் கருவாட்டுக்கான விசேட வர்த்தக வரியை கிலோவுக்கு ரூ. 100-லிருந்து ரூ. 10 ஆகக் குறைத்தது உள்நாட்டுச் சிறு மீனவர்களுக்கும் கருவாடு காயவைக்கும் ஏழைப் பெண்களுக்கும் மரண அடியாக அமையும் எனத் தெரிவித்தார்.
மீனவர்கள் மரணமடையும் போது வழங்கப்படும் நஷ்டஈடு உயர்த்தப்பட்டதைப் போல, உயிருடன் இருக்கும்போது பாதுகாப்பும் வாழ்வாதாரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், திருகோணமலையின் 7 மைல் நிபந்தனைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், கடற்றொழில் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.







.jpg)




