கைது செய்யப்பட்டவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் இன்று அதிகாலை 12 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவர் கொண்டுவந்த பயணப் பொதியைச் சோதனையிட்ட அதிகாரிகள், புளியம்பழ இனிப்பு எனக் குறிப்பிடப்பட்ட நான்கு டின்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 102 கிராம் 'குஷ்' போதைப்பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், இனிப்புகள் அடங்கிய ஆறு பொதிகளில் இனிப்பு வடிவில் தயாரிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 260 கிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.










.jpg)


