போரதீவுப்பற்றுப் பிரதேசசபை 'மக்களது வரிப்பணம் மக்களுக்கே' என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக சுகாதாரப் பகுதியின் ஊடாக பிரதேசசபை நிதி ஒதுக்கத்தின் கீழ் கற்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதி வழங்கும் செயற்திட்டம் 18.11.2026 புதன்கிழமை வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச சபை கலாசார மண்டபத்தில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்றது.
போரதீவுப்பற்றுப் பிரதேச சபை 10 வட்டாரங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 100 கற்பிணித் தாய்மாருக்கு இன்று முதற்கட்டமாக குறித்த போசாக்குப் பொதிகளை சபையின் சொந்த நிதியில் இருந்து பொது மக்கள் நலன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதேசசபை உபதவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கற்பிணித் தாய்மார்கள் எனப் பலர் கலந்து கொண்டு போசாக்குப் பொதிகளைத் தாய்மார்களுக்கு வழங்கி வைத்தனர்.


.jpg)

















