
ரத்கம - மலிடுவ பிரதேசத்திலுள்ள விளையாட்டு மைதானமொன்றில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், அவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்கலாம் என நம்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ரத்கம பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.







.jpg)




