
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலும், ஐரோப்பிய குளிர்காலச் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கிலும் பிரான்ஸை தளமாகக் கொண்ட 'பிரெஞ்சு பீ' மற்றும் ரஷ்யாவை தளமாகக் கொண்ட 'S7 எயார்லைன்ஸ்' ஆகிய இரண்டு சர்வதேச விமான நிறுவனங்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் இலங்கைக்கான தமது விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.
எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு விமானச் சேவைகளை இயக்கவுள்ளது. பாரிஸ்-ஓர்லி விமான நிலையத்திலிருந்து மாலைதீவு ஊடாகவும் நேரடியாகவும் இச்சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன
எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி முதல் கொழும்பிற்கு வாரத்திற்கு இரண்டு நேரடி விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த புதிய விமானச் சேவைகளின் அறிமுகத்தினால், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







.jpg)




