
மருத்துவர்களின் மீதான நிதிச் சுமையைக் குறைப்பதற்காக, தற்போதைய வரி கட்டமைப்பு மற்றும் கொடுப்பனவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கோரிக்கை விடுத்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பண்டார வரகொட தெரிவிக்கையில்,
மருத்துவர்கள் தாங்கள் ஈட்டும் வருமானத்தின் மீது வரி விதிக்கப்படும்போது, அவர்களது தனிப்பட்ட மற்றும் குடும்பச் செலவுகள் உள்ளிட்ட அன்றாடச் செலவுகள் முறையாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் அண்மையில் அதிகரிக்கப்பட்டதை வரவேற்கின்றோம். கூடுதல் கடமை, போக்குவரத்துக் கொடுப்பனவுகளையும் நாங்கள் எதிhபார்க்கின்றோம்.
மருத்துவப் பணியாளர் மீதான செலவீனமானது ஒரு செலவாகக் கருதப்படாமல், நாட்டின் இலவச சுகாதார முறைமை மீதான முதலீடாகக் கருதப்பட வேண்டும் மேலும், அரசாங்கத்தின் நிதி நிலையானது சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
மேலும் பொருளாதார நெருக்கடியின் போது ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதனால் பணியில் தொடரும் மீதமுள்ளவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியானது மருத்துவர்களின் சில நிதி நலன்கள் மற்றும் கொடுப்பனவுகள் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படும் வகையில் முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, அரசாங்கம் மருத்துவத் துறையின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.










.jpg)

