அம்பாறை மாவட்ட நிருபர்அம்பாறை அட்டாளைச்சேனை பிரதான வீதி மீனோடைக்கட்டு பிரதேச வீதி வளைவில் இன்று (28) முச்சக்கரவண்டி (ஆட்டோ) ஒன்று கட்டுப்பாட்டை இழந்ததில் வீதியைவிட்டு விலகி குடைசாய்ந்த வீதிவிபத்தில் அதில் பயணம் செய்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்
நிந்தவூரிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சம்பவதினமான திங்கட்கிழமை காலை 8.45 மணியளவில் வேகமாக சென்ற முச்சக்கரவண்டி வீதிவளைவில் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாமல் வீதியைவிட்டு விலகி வீதிவபத்துக்குள்ளானது இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பிரயாணித்த நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப்ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
இதேவேளை ஆட்டோ சாரதி காயங்கள் எதுவுமின்றி தப்பித்துள்ளதுடன், முச்சக்கர வண்டி கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--








.jpg)



.jpeg)

.jpeg)