பே.சபேஷ்ஐ.நாவின் மனித உரிமை 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று கிழக்கு மாகாணத்திலும் கண்டன ஆர்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன.
ஆளும் கட்சியில் அங்கம்வகிக்கும் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்ங்களும் பேரணிகளும் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களிலே பரவலாக நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய இடங்களில் நடைபெற்ற அதேவேளை மட்டக்களப்பு நகரிலும் நடைபெற்றது.
இந்த ஆர்பாடங்களிலும் பேரணிகளிலும் கலந்துகொண்டவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கும் வகையிலும் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு வாசக அட்டைகளை ஏந்நியவாறு கோஷங்களையும் எழுப்பினார்கள்.
சில பிரதேசங்களில் இடம்பெற்ற ஆர்பாடடங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் கலந்துகொண்டதையும் காணக் கூடியதாகவிருந்தது.
ஆர்பாட்ட பேரணிகள் நடைபெற்ற முஸ்லிம் பிரதேசங்களில் இன்று நன்பகல் வரை வழமை நிலை ஸ்தம்பிதமடைந்திருந்தது. தமிழ்ப் பிரதேசங்கiளில் அனைத்து அலுவல்களும் வழமை நிலை காணப்பட்டது.







.jpg)



.jpeg)

.jpeg)