
Uthayakanth
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலாநந்தா வித்தியாலயதின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வானது
வித்தியாலயத்தின் அதிபர், பழைய மாணவர் சங்க தலைவர், பாடசாலை அபிவிருத்திச் சங்க தலைவருமாகிய
ஏ.வேலாயுதம்பிள்ளை அம்மணி அவர்கள் தலைமையில் இன்று 27.02.2012 ஆம் திகதி வித்தியாலய விளையாட்டு
மைதானத்திலேயே மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ பூ.பிரசாந்தன் (கிழக்கின் விடியல் , கிழக்கின் இளைய தளபதி)
அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை கல்வியுடன் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்வதன் மூலமாக எமது உடலின்
தேக ஆரோக்கியத்தையும் பேண முடியும் எனும் தத்துவம் அடங்கிய செய்தியை தமது உரை வாயிலாக எடுத்துரைத்தார்.
அது மட்டுமல்லாது பாடசாலையின் தேவைப்பாடுகள் அனைத்திலும் தான் உதவி புரியத் தயாராக இருப்பதாகவும் வாக்குறிதியளித்து தனது உரையை
நிறைவு செய்தார்.
மேலும் அதிதிகள் வரிசையில் கல்வித் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும், பழைய மாணவர் சங்கத்தினரும், சிக்கன
கூட்டுறவு சங்கத்தினரும், சின்மயா மிஷன் நிர்வாக உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்களும்
இன் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.















.jpg)



.jpeg)

.jpeg)