ரஷ்யா நாட்டைச் சேர்ந்த இரு இளம் காதலர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்து இந்நாட்டு விவாகப்பதிவு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, பாசிக்குடா மாலுமாலு சுற்றுலா விடுதியில் திருமணம் செய்து கொண்டனர்.இந்த திருமணத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் றூமி ஜஃபரின் வேண்டுகோளில் பாசிக்குடா மாலு மாலு சுற்றுலா விடுதி நிர்வாகம் நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
இதற்கமைய ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய ஒல்கா யூரீவ்னா கொர்பேரா (Yuriewna Gorbhera) வும் அவரது 26 வயது காதலியான பிளட்மிர் அலெக்சான்றிச் இந்துஹாகோ- ர்ஸ்கி (INTUHAKO- RSKIY) யும் இலங்கை ஜனநாயகக் குடியரசின் விவாகச் சட்டப்படி வாழைச்சேனை பிறப்பு இறப்பு பதிவுகாரர் திருமதி யோகராஜா முன்னிலையில் தமிழ்ப் பதிவு புத்தகத்தில் ஒப்பமிட்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.
இந்த ரஷ்ய இளம் காதல் சோடிகளின் திரு மணம் இருதரப்பு உறவினர்கள் மு ன்னிலையில் பாசிக்குடா மாலுமாலு சுற் றுலா விடுதியில் சிறப்பாக நடைபெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் ஊடாக அதிகாரி பி.. அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
இவ்விதம் இங்கு திருமணப் பதிவு கொண்ட ரஷ்ய தம்பதிகள் எதிர்வரம் 23 ஆம் திகதிவரை பாசிக்குடாப் பகுதியில் தேனிலவைக் கழிக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
இத்தம்பதிகள் கருத்து தெரிவிக்கையில், இரம்மியமான பசுமை மிகுந்த இலங்கையில் நாம் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதை பெரும் பாக்கியமாக கருதுவதாகத் தெரிவித்தனர்.
--


.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)




.jpg)



.jpeg)

.jpeg)