வின்சன்ற் பாடசாலையில் சரஸ்வதி சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Krishna-
மட்டக்களப்பு, வின்சன்ற் மகளிர் தேசியப்பாடசாலையில் அமைக்கப்பட்டு பொருளாதார அபிவிருத்தி அமைச்சரினால் திறக்கப்படவிருந்த சரஸ்வதி சிலை அங்கிருந்து அகற்றப்பட்டமைக்கும் அதிபர், ஆசிரியர்களை அவமதித்தமைக்கும் எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலைமுதல் ஆசிரியர்கள் பொற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் திருமதி பவளகாந்தன் பாடசாலைக்கு விஜயம்செய்து அதிபருடன் கலந்துரையாடினார்.

இதன்போது வலயப்பணிப்பாளர் தமக்கு நியாயமான பதில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பாடசாலையின் நுழைவாயிலின் உள் பக்கத்தை ஆசிரியர்களும் வெளிப்பக்கத்தை பெற்றோரும் பழைய மாணவர்களும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தம்மையும். தமது அதிபரையும் சிலர் மிரட்டியதாகவும், அதனால் தம்மால் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட முடியாதுள்ளதாகவும், தமக்கு இப்பிரச்சினைக்குத்தீர்வு தேவை எனவும்ஆசிரியர்க்ள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பிலான மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்திருமதி பவளகாந்தனிடம் ஆசிரியர்கள் கையளித்துள்ளனர்.

சமூகத்துக்கு முன்மாதிரிகளைப் புகுத்தும் இடம், பன்மைச்சமூகத்தை அங்கீகரிக்குமு; இடம், முன்மாதிரிகளை சமூகத்தில் விதைக்கும் இடம், திருச்சபையும் ஜெயகரனும் சுயாதீனமான கல்வி நிறுவனத்தில் எந்தத்தலையீட்டையும் ஏற்படுத்த இடமளிக்க நாம் தயாரில்லை.
ஜெயகரனும் அவருடன் இணைந்த தீய சிந்தனைகொண்ட சக்திகளும் விடுக்கும் அச்சுறுத்தல்களுக:கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், குருவை மதி, அதிபரை அவமதியாதே, கல்வித் தெய்வத்தை அவமதியாதே, மாணவரின் குறிக்கோள் கல்வி மட்டுமே, யாழ்ப்பாணம், திருகோணமலை மெதடிஸ்த பாடசாலைகளிலும் கல்வித் தெய்வத்தின் சிலை உண்டு, கிழக்கு மாகாண கல்விச் செயலாளரே உடனடித் தீர்வு தேவை, எமது அதிபரை தரக்குறைவாக அதிபர் அலுவலகத்தில் வைத்து திட்டியதற்கு இ.ஜெயகரன் மன்னிப்புக் கோரவேண்டும். போன்ற கோசங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

வியாழக்கிழமை தம்மையும். தமது அதிபரையும் மிரட்டியுள்ளதுடன், அச்சுறுத்தலும் விடுத்துள்ள நிலையில் தம்மால் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மனோநிலை உள்ளதாகவும், அதனால் கல்விச் செயலாளர் இப்பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தரும் வரை தாம் போராட்டத்தினை நடத்தவுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே வேளை, பாடசாலை சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்ற இடமளிக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பிலான மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்திருமதி பவளகாந்தனிடம் ஆசிரியர்கள் கையளித்துள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு, பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்தள்ளனர்.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர்திருமதி பவளகாந்தன்,ஆசிரியர்களின் உணர்வுகளை தங்களால் புரிந்துகொள்ளமுடிவதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை கல்வியமைச்சின் செயலாளர் இது தொடர்பில் ஆராய வருகைதரும்போது ஆசிரியர்களின் கோரிக்கைக்கு தீர்வுபெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இதனையடுத்து ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டதுடன் பெற்றோரும் பழைய மாணவர்களும் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.எனினும் திங்கட்கிழமை தமது கோரிக்கைக்கு உரிய பதில் வழங்காதுபோனால் தொடர்ச்சியாக தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை புதிய 3 மாடிக் கட்டத்திறப்பு விழா நடைபெற்றது இவ் விழாவிற்கு வருகைதந்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பஸில் ராஜபக்ஸவினால் திறக்கப்படவிருந்த சிலையே அகற்றப்பட்டிருந்தது.














--