அம்பாறை மாவட்ட நிருபர் ;மட்டக்களப்பு ஒ ட்டமாவடி பிரதேசத்தில் நீண்டநாட்களாக போலி சாரதி
அனுமதிப்பத்திரம் மற்றும் கடவுச் சீட்டு, போன்ற ஆவணங்களை செய்து கொடுக்கும்
மினிக்கச்சேரி ஒன்றை இன்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவரை
கைதுசெய்துள்ளதுடன் பல போலி ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் இந்த போலி சாரதி
அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுத்த கல்முனை, அக்கரைப்பற்று இலங்கை
போக்குவரத்து சபைகளின் டிப்போக்களில் கடமையாற்றும் இரு உத்தியோகத்தர்கள்
மற்றும் போலியான சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்த இருவர் உட்பட ஜந்து
பேரை இன்று திங்கட்கிழமை காலை அம்பாறை சவளக்கடை பொலிசார் கைது செய்துள்ளதாக
சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்
அம்பாறை சவளக்கடை போக்குவரத்து பொலிசார் சவளக்கடை வீ.சி. சந்தியில்
வாகனசோதனை நடவடிக்கையை சனிக்கிழமை காலை 10.50 மணியளவில் மேற்கொண்டபோது
மோட்டார் சைக்கிளை செலுத்திவந்தவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை சோதனை
செய்தபோது போலி சாரதி அனுமதிப்பத்திரம் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து
மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த மண்டூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிசார்
கைது செய்தனர்
அதேவேளை சம்பவதினமான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு அதே இடத்தில்
போக்குவரத்து பொலிசார் மேற்கொண்ட வாகனசோதனையின் போது உழவ இயந்திரம்
செலுத்திவந்தவரும் போலி சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்ததையடுத்து அவரையும்
பொலிசார் கைது செய்தனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் செய்யப்பட்ட விசாரணையையடுத்து சாரதி
அனுமதிபத்திரத்தை பெற்றுக் கொடுத்த இலங்கை போக்குவரத்து சபைகளான கல்முனை
டிப்போவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஓருவரையும் அக்கரைப்பற்று டிப்போவில்
சாரதியாக கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவரை ஞாயிற்றுக்கிழமை
மாலை 4 மணிக்கு கைது செய்யப்பட்னர்
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்; உத்தியோகத்தர்களிடம் பொலிசார்
மேற்கொண்ட விசாரணையையடுத்து போது போலி சாரதி அனுமதிப் பத்திரத்தை தயார்
செய்து வழங்கிவந்த மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் மினிக்கச்சேரியை
நடாத்தி வந்தவரை இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு அவரது வீட்டில் வைத்து
கைது செய்ததுடன் அங்கிருந்து போலி சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச் சீட்டு,
ஆவணங்கள் புகைப்படங்கள், போலி சாரதி அனுமதிப்பத்திர கவர்கள் போன்ற பல
ஆவணங்களை இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது என பொலிசார்
தெரிவித்தனர்
இச் சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களை கல்மனை நீதிமன்றத்தில் இன்று
திங்கட்கிழமை மாலை ஆஜயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது
தொடர்பான விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
--






.jpg)



.jpeg)

.jpeg)