வவுணதீவு பொலிசாரின் ஏற்பாட்டில் நாவற்காட்டில் பொலிஸ் நடமாடும் சேவை.




கிருஸ்ணா & (பிரணி)

வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்.நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சனிக்கிழமை பொலிஸ் நடமாடும் சேவை நடைபெற்றது.


வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெர்னாண்டோ மற்றும் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஆ.ஐ.உவைஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பொலிஸ் நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக வவுனதீவு பிரதேச செயலாளர் வில்வரெட்னம்,பிரதேச சபை தலைவர் சுப்ரமணியம் ஆகியோhர் கலந்துகொண்டனர்.

பொலிஸார் பொதுமக்களின் உறவினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் நலன்கருதி ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவையூடாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.

கடந்த கால யுத்த சூழ்நிலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு தேவையான ஆவனங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகம் தனது கிளையினை இங்கு அமைத்திருந்தது.

அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர் திவாகரன் தலைமையிலான வைத்திய குழுவினரும் இன்று தமது சேவைகளை வழங்கினர்.

இந்த நடமாடும் சேவையின்போது பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கல், காலங்கடந்த திருமண பதிவினைச் செய்தல், பொலிஸ் முறைப்பாடு, முறைப்பாட்டு பிரதியினை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு என்பவற்றிற்கு விண்ணப்பித்தல்,இரத்த பரிசோதனை, பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம்பெற்றன.

இந்த நடமாடும் சேவையில் வவுனதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட 24 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த மக்கள் நன்மையடைந்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெர்னாண்டோ தெரிவித்தார்.










--