இனங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துமுகமாக இடம்பெற்ற நிகழ்வு

(கிருஸ்ணா)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளம் உள்ளங்களுக்கான ஆன்மீகசுகம் என்னும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் ஆன்மீக நடவடிக்கைகளை மேம்படுத்தும்; செயற் திட்டமொன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.



தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஹிஸ்புல்லா மண்டபத்தின் நுழைவாயிலில் இருந்து ஆன்மீக ஊர்வலமொன்று நடைபெற்றது.

இதையடுத்து ஹிஸ்புல்லா மண்டபத்தில் ஒன்று கூடல் ஒன்றும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், விஸ்ம பிரம்மன் வை ஸ்ரீ காந்தன் குருக்கள், மௌலவி எம்.எச்.எம்.புகாரி, அருட்தந்தை ரஜீவன் இருதய ராஜ், பௌத்த மதகுரு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜே.கபூர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரி திருமதி கலாரானி,அதன் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இனங்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துமுகமாக இளைஞர் யுவதிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துமுகமாகவும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் ஏ.ஜே.கபூர் தெரிவித்தார்.










--