சரஸ்வதிசிலை மீண்டும் அதே இடத்தில் மாணவர்களினால் வைக்கப்பட்டுள்ளது.

கிருஸ்ணா & பிரணி

இன,மதத்துக்கு அப்பால் கல்வி அன்னையாக மாணவர்கள் அனைவராலும் கருதப்படும் சரஸ்வதி தாயை களஞ்சிய அறையில் வைத்து பூட்ட அனுமதிக்கமாட்டோம் என மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையின் மாணவிகள் தெரிவிக்கின்றனர்.


மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் தேசிய பாடசாலையில் அகற்றப்பட்டிருந்த சரஸ்வதிச்சிலை மீண்டும் அதே இடத்தில் மாணவர்களினால் வைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் பாடசாலை நேரம் முடியும் தருவாயில் ஒன்று சேர்ந்த மாணவர்கள் பாடசாலையின் களஞ்சிய அறையில் இருந்த சிலையினை முன்னர் நிறுவ அமைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் நிறுவினர்.

மாணவர்கள் இன,மத சிந்தனைக்கு அப்பாற்பட்டவர்கள் என தெரிவித்த மாணவிகள் இதனையாரும் மதப்பிரச்சினையாக கருதாமல் மாணவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டுசெயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சிலை எம்மால் வைக்கப்பட்டதற்கும் எமது பாடசாலையை சேர்ந்த ஆசியர்கள்,அதிபர் எவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென தெரிவித்த மாணவிகள்,எமது உணர்வுகளை புரிந்து அனைவரும் செயற்படுவார்கள் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தனர்.
இன்று காலை பாடசாலை நுழைவாயில் உட்பட சகல பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த மாணவிகள் வெளியார் யாரும் நுழைய அனுமதிக்கவில்லை.

இதனைத்தொடர்ந்து களஞ்சிய அறையில் பூட்டிவைக்கப்பட்டிருந்த சிலையிலை கொண்டுவந்து தாபித்தனர்.




By- பிரணி
இச்சிலை மாணவர்களால் 22ம்திகதி அமைக்கப்பட்ட போது மட்டக்களப்பு
மெதடிஸ்ததிருச்சபையினர் இதற்கு எதிர்ப்ப தெரிவித்ததுடன் சிலையை 
அக ற்றுமாறு மெதடிஸ்தஆசிரியர் மற்றும் மாணவர்கள் பெற்றார்கள் சிலர் இணைந்து ஆர்ப்பாட்டத்திலும்
ஈடுபட்டிருந்தனர்.23ம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அப்பாடசாலையில் கட்டிடத்த திறப்புவிழாவிற்கு வருகை தர இருந்த நிலையில் சுமுகநிலையை ஏற்படுத்துவதற்காக சிலைஅகற்றப்பட்டது. இந்நிலையில் இச்சிலை விவகாரம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி
இருந்தது. இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் ஜனாப் நிசாம் பாடசாலைக்குவிஜயம் மேற்கொண்டதுடன் இவ்விடயம் குறிந்து ஆராய்ந்த போது
மாணவர்களின் சிலை அமைப்பதற்கான வேண்டுகோளுக்கு பதிலளிக்க ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டதாகமாணவர்கள் தெரிவித்தனர். இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள் பாடசாலை அபிவிருத்திசங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்த வேளையிலேயே மாணவர்களால் இவ்வேண்டுகோள் முன்வைக்கப் பட்டுள்ளது.
பிரதிச் செயலாளர் பாடசாலையை விட்டு வெளியேறியபின் பாடசாலை விடும்
நேரத்தில்மாணவர்களால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அறைகளில் வைத்து
பூட்டப்பட்டதுடன் குறித்த
இடத்தில் அதே சரஸ்வதி சிலையினை நிறுவியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளதுடன் சம்பவம் அறிந்து பாடசாலைக்கு சென்ற எவரையும் உள்நுழைய அனுமதிக்காது
நுழைவாயிலை பூட்டியதுடன் சிலை அகற்றப்பட மாட்டாது என்ற
உத்தரவாதத்தினைஅதிகாரிகளால் வழங்கப்பட்ட பின்னரே பாடசாலை நுழைவாயில் திறக்கப்படும் எனத்தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி
நவரட்ணபண்டாரபாடசாலைக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கிய உத்தரவாதத்தினை அடுத்தே நுழைவாயில்திறக்கப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலையை விட்டு வெளியேறினர்.
பொலிசார் குறித்த சிலை எவராலும் அகற்றப்பட மாட்டாது எனவும் அதனை நீதிமன்ற அனுமதிபெற்றே அவ்வாறு செய்ய முடியும் எனவும் மாணவர்களுக்கு உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில்மாணவர்கள் சிலைக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் பொலிசாரிடம்கோரிக்கை விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு கடமைக்காகபொலிசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.








--