மட்டக்களப்பில் பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு -Photo

கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.



புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியை சேர்ந்த 63 வயதுடைய சின்னத்தம்பி இளையதம்பி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.

நேற்று இரவு புளியடி வீதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்றவர் இன்று காலை அந்த வீதியில் உள்ள கிணற்றடிச்சந்திப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் தலைப்பகுதியில் பாரிய வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் இவர் கொலைசெய்யப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் பாரிய  வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி மரண விசாரணையை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் பணித்தார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



--