த.லோகதக்சன்வாழைச்சேனைகல்குடா வீதியில் அமைந்துள்ள வீடொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சிதம்பரப்பிள்ளை சர்வதா என்பவரின் வீடேதிங்கட்கிழமை அன்று இரவு வேளை தீக்கு இரையாக்கப்பட்டுள்ளது. அதிஷ்ட வசமாக உயிர் சேதம்எதுவும் ஏற்படவில்லை. வீட்டு உரிமையாளர் வீட்டில் இல்லாத போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம்தொடர்பாக தெரியவருவதாவது
வீடுஎரிவதைக் கண்டெறிந்த அயலவர்கள் வீட்டினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்வீட்டின் உரிமையாளர் வீட்டினுள் அக்கட்டுள்ளாரோ என்ற அச்சத்தின் காரணமாக தீயை அனைத்துவிட்டு வீட்டின் உள்பகுதிக்குள் நுழைந்து வீட்டின் உரிமையாளரை தேடும் நடவடிக்கையில் அயலவர்கள்ஈடுபட்டினர் அவ்வேளை வீட்டின் உரிமையாளர் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது.மட்டக்களப்பில் உள்ள அவரது உறவினர்களுக்கு அயலவர்களால் அறிவிக்கப்பட்ட பின் அவர்கள்வந்து நிலைமை பார்வையுற்றனர். வாழைச்சேனை பொலிஸாருக்கு மக்கள் தெரிவித்த பின் பொலிஸார்சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை மேற்கொண்டனர். பின்னர் தீ ஏற்பட்டமைக்கான காரணம்எதுவென்று உடனடியாக தெரிவிக்க மறுத்தனர். தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளைஅவ்வீட்டில் இருந்த சுவாமி அறையில் வாழைச்சேனை ஸ்ரீ பள்ளப்பேச்சியம்மன் ஆலயத்திற்கான இலட்சம்ரூபா பெருமதி வாய்ந்து ஆலய பொருட்கள், தங்க ஆபரணங்கள், அம்மாளுக்கான புடவைகள்,பணங்கள் போன்றவை தீயில் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் வாழைச்சேனைபொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
--









.jpg)



.jpeg)

.jpeg)