Battinews.com இணையதள ஓராண்டு நிறைவு வாழ்த்து செய்தி



ர்வம் மாத்திரமே மூலதனமாய்க் கொண்டு, ஆண்டொன்றை வேகமாகக் கடந்து வந்திருக்கிறீர்கள். வேகத்தை மாத்திரமல்லாமல் விவேகத்தையும், ஓர் ஒழுங்கையும் உங்கள் ஊடக நடவடிக்கையில் காணமுடிகிறது.
அனைவருக்கும் ஒரு தளமாக, அனைத்து விவாதங்களுக்கான ஆரோக்கியமான ஒரு களமாக உங்கள் செய்தித்தளம் இணையத்தில் திகழட்டும். கிழக்கிலங்கை மக்களை மாத்திரமல்லாமல், அனைத்திலங்கை மக்களையும் கவரும் ஊடகமாக வளர வாழ்த்துகிறேன்.
ஆயிரம் பூக்கள் மலரட்டும்....
அன்புடன் சீவகன்
BBC - London


கிழக்கின் ஊடகத்துறை வரலாற்றில் முக்கியமானதும், தவிர்க்கமுடியாததுமாக Battinews.com இணையத்தளம் மாறிக்கொண்டு வருவதையிட்டு ஒரு ஊடகவியலாளனாக நான் மகிழ்சி அடைகின்றேன்.
கலைகளின் தோற்றுவாயாகவும், செந்தமிழின் காப்பகமாகவும், வீரத்தின் விளை நிலமாகவும், அழகின் உறைவிடமாகவும் இருக்கின்ற கிழக்கு மண்ணின் மகிமைகளையும், அன்றாட நிகழ்வுகளையும் அழகாகப் பதிவிலிட்டுவரும் இந்த இணையத்தளத்தினை, கிழக்கின் ஒரு மைந்தனான நான் பெருமையுடனேயே பார்க்கின்றேன்.
போட்டிகள் நிறைந்த இன்றைய நவீன ஊடகத்துறையில் மிகப் பிரமாண்டமான ஒரு வளர்சியினைப் பெற்றுவிட்டுள்ள இந்த இணையத்தளத்தின் பின்னணியில் தற்பொழுதுதான் மீசை அரும்ப ஆரம்பித்துள்ள சில துடிப்பான மாணவர்களே இருக்கின்றார்கள் என்கின்ற செய்தி உண்மையிலேயே கிழக்கினை நேசிக்கின்ற அனைவருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சிதான்.
எமது மன்னின் மைந்தர்களே!!!
உங்களையிட்டு நான் பெருமை அடைகின்றேன். இந்த இணையத்தளம் மேலும் மேலும் வளரவும், இதன் செயற்பாடுகள் பெருகவும், எமது மன்னினதும், சமூகத்தினதும், தமிழ் இனத்தினதும் இருப்பிலும் வளர்சியிலும் இந்த இணையத்தளம் ஒரு முக்கிய பங்கிளை வகிப்பதற்கும் நான் மனதார வாழ்த்துகின்றேன்.
தொடரட்டும் உங்கள் பணி.

நிராஜ் டேவிட்
ஊடகவியலாளர்


தற்போதைய காலத்தில் மிக விரைவாக செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகம் இணையதளம் , உலகெங்கும் இருக்கிற எமது மக்களுக்கு இந்த இணையதளம் ஊடாக எமது பிரதேச செய்திகள் விரைவாக சென்றடைகிறது .. செய்திகள் மட்டுமின்றி எமது மண்ணின் சிறப்புக்கள் பற்றியும் வெளிக்கொண்டுவருவது மிகவும் சிறப்பாக உள்ளது
இதை உருவாக்கியவர்களுக்கும் இதனுடன் இயங்கிகொண்டு இருக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்
ஊடகம் என்பது உண்மையாக செயற்படவேண்டும் , ஊடகங்கள் உண்மையற்ற செய்திகளை பரப்புவதன் மூலமே புலம்பெயர் மக்களிடையே குழப்பங்கள் காணப்படுகின்றன எனவே ஊடகங்கள் உண்மைதன்மையை கடைப்படித்து செயற்படவேண்டும் .

விநாயகமூர்த்தி முரளிதரன்
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்

தனித்திறமையை வெளிக்காட்டலை பாராட்டுகின்றோம்
கிழக்கு மாகாண அபிவிருத்திப் பணிகளை காத்திரமான பங்களிப்பாக செய்துவரும் Battinews இன் 1வது ஆண்டு தடம்பதித்தலை பெருமையுடன் நினைவு கூருகின்றோம். ஒரு சமூகத்தின் ஸ்திரப்படுத்தலுக்கும், முன்னேற்றத்திற்கும், ஆவணப்படுத்தல், வெளிப்படுத்தல்மிகவும் அத்தியாவசியமானது. அந்தப் பணியை செவ்வனே மேற்கொள்வதற்கு battinews தனது பங்களிப்பை தொடர்ந்து செய்யும் என்ற நம்பிக்கையுடன் மேலும் வளர்ச்சியடையவாழ்த்துகின்றேன்.

சி.சந்திரகாந்தன் ,முதலமைச்சர்
கிழக்கு மாகாணம்

உயர்வான பணிசெய்து உலகத் தழில் பேசும் மக்களின் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் 'வற்றிநியுஸ்' ஊடகம், ஓராண்டைப் பூர்த்தி செய்து நிற்கும் இன்றைய நன்னாளில் இன்னும் பல்லாயிரமாண்டுகள் பணி தொடர வேண்டுமென வாழ்த்துகிறேன்.

பொன். செல்வராஜா
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்




கிழக்கு மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு சிறந்த ஊடகமாக ஒரு வருடமாக களம் அமைத்துள்ள வெற்றி நியூஸ் (மட்டக்களப்பு செய்தி) இணையத்தளத்தின் பணி பாராட்டத்தக்கதாகும். இன்று எமது தமிழ் இனம் பல இன்னல்களை எதிர்நோக்கி கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது புலம்பெயர் உறவுகளிடையே எனது இனத்தின், எமது மண்ணின், செய்தியை உடனுக்குடன் கொண்டு சென்று உதவும் பெரும் பங்கை மேற்கொள்ளும் ஊடகங்களில் ஒன்றாக உள்ள ஊடகத்தின் பணி சிறப்பாக தொடர நல்வாழ்த்து தெரிவிக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்திற்குரிய கலாசார நிகழ்வுகளை தமிழர்கள் எங்கு புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரே இணைய சேவையாக வெற்றி நியூஸ் விளங்குகின்றது. மற்றைய இணையத்தளங்களை விட கிராமங்களில் நடைபெறும் சிறிய நிழ்வுகளைக் கூட வெற்றி நியூஸ் வெளியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் வெற்றி நியூஸ் ஒரு வருட நிறைவு கண்டு மட்டக்களப்பு மண் பெருமை அடைவதுடன் என்றும் வெற்றி நியூஸ் சேவையை எதிர்பார்த்து நிற்கின்றது. மாகாண பேதம், மாவட்ட பேதம், பிரதேச வாதம் என்ற உணர்வலையை எமது சமூகத்தில் விதைப்பவர்களுக்கு சவாலாக எமது தாயக மண் வடக்கு கிழக்கு என்ற உணர்வை எமது உறவுகளுக்கு வலுவூட்டுவதாக இவ் ஊடகம் அமைய வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும். அத்துடன் ஊடக நடுநிலை பேணி செயற்படுவதாகவும் இது அமைய வேண்டும் என இறைவனை வேண்டி இதன் முன்னேற்றத்துக்கு இறையாசி கிடைக்க பிராத்திக்கின்றேன்.
சீ.யோகேஸ்வரன் 
பாராளமன்ற உறுப்பினர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாமத்துடன் மண்பற்று செயற்பாடான கிழக்கின்வெளிப்பாடுகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பும் battinews 2ம் வருடத்தில் காலடிஎடுத்து வைப்பதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அதிலும் குறிப்பாக செய்திகளை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதற்கான துரித பங்களிப்பினையும்,பராட்டுவதுடன் தங்களது சேவை மேலும், மேலும் தொடர வாழ்த்துகின்றேன்.

பூ.பிரசாந்தன்
மாகாணசபை உறுப்பினர்

எம் கிழக்கு மானிலத்தின் செய்திகளை தரணியெங்கும் தமிழிலே தவழவிட்டு, தமிழுக்கு உரமேற்றி தவழ்ந்து தடம்பதித்து ஓராண்டில் தலையுயர்த்தி நிற்கும் 'Battinews' இணையத்தளம் பாரினிலே பல்லாயிரமாண்டுகள் செய்திப்பணி செய்திட எல்லாம் வல்ல இறையருள் வேண்டி வாழ்த்துகிறேன்.

தேசகீர்த்தி வி. றஞ்சிதமூர்த்தி
தலைவர்,
மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக, கைத்தொழி;ல், விவசாய சம்மேளனம்


வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது தமிழ் மக்கள் அனைவராலும் இன்று பார்த்து மகிழ்கின்ற ஓர் இணையத்தளமாக வற்றிநியுஸ் ஊடகம் வளர்ந்து நிற்கின்றது. அதுமட்டுமன்றி எமது நாட்டிலும் அதிகளவான தமிழ் பேசும் மக்கள் நாளாந்தம் பார்வையிடும் இணையத்தளமாகவும் இது மாறிவருவது மகிழ்ச்சிக்குரியதே..
09.03.2012 இன்று ஓராண்டை நிறைவு செய்து அடுத்த ஆண்டை நோக்கி நிற்கும் இவ் இணையத்தளத்தின் பயணம் பல்லாயிரமாண்டுகள் தொடரவேண்டுமென வாழ்த்துகிறேன்.
பொன். வன்னியசிங்கம்
அதிபர்,
பட்டிருப்பு தேசிய பாடசாலை,
களுவாஞ்சிகுடி.


தமிழிலே இணையத்தளம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் எமது கிழக்கிலங்கையின் செய்திகளை உலகறியச் செய்து வரும் சயனொளிபவனின்  இவ் அரியமுயற்சி பாராட்டுதலுக்குரியதாகும்.
களுவாஞ்சிகுடியில் இடம்பெறும் இன்றைய (09.03.2012) 'battinews.com  இணையத்தளத்தின் ஓராண்டுப் பூர்த்தி நிகழ்வில் நானும் கலந்து மகிழ்வதுடன் மென்மேலும் இப்பணி தொடர இறையருள் வேண்டி வாழ்த்தி நிற்கின்றேன்.
வி.ரவிந்திரமூர்த்தி
ஆசிரியர்
மட்ஃபட்டிருப்பு தேசிய பாடசாலை
களுவாஞ்சிகுடி.--