மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதி பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் புகுந்து அட்டகாசம்

மட்டக்களப்பு மங்களகம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரர் வெள்ளை வேனில் இன்று (27)  காலை பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு சென்று   பிரதேச செயலாளரை அச்சுறுத்தி பிரதேச செயலாளர் அறையின் மேசையிலிருந்த    கணணி, தொலைபேசி மற்றும் பெக்ஸ்  இயந்திரம ஏனைய அவணங்களை  தூக்கி எறிந்து சேதப்படுத்தி பிரதேச செயலாளரை தாக்க சென்றுள்ள சம்பவம் ஓன்று இடம்பெற்றுள்ளது



குறித்த தேரர் சுவாமி   கச்சக்கொடி சுவாமி மலையில்   விகாரை கட்டுவது சம்பந்தமாக பிரதேச செயலாளரை சந்திக்க சென்றதாகவும் அங்கு பிரதேச செயலாளர் அலுவலக கூட்டத்தில்  இருந்த போது சிறிது நேரம் அவர் தாமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக பிரதேச செயலாளர் தாமதிக்க வைத்ததாக தெரிவித்து பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர் .
இதனை அடுத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குறித்த தேரரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும்வரை தாங்கள் எந்த வித பணியையும் செய்ய போவதில்லை என பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் தற்போது அணைத்து உத்தியோகஸ்தர்களும் தங்களது ஆட்சேபனையை தெரிவித்து பிரதேச செயலக விளம்பர பலகையில் விளம்பரமிட்டு பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் .

பிரதேச செயலக உத்தியோகத்தர் தெரிவிக்கையில் குறித்த மதகுருவானவர் தொடர்ச்சியாக பிரச்சனைகளில் ஈடுபடுவதாகவும் தற்போது ஒரு பிரதேச செயலாளரை தாக்க முற்பட்டபோது தடுத்து நிறுத்த ஏற்பட்டதாகவும்  அதேவேளை அங்குள்ள பொருட்கள், ஆவணங்கள் சேததப்படுத்தியதை தாங்கள் கண்டிப்பதாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்வரை தாங்கள் பணியில் ஈடுபடபோவதில்லை எனவும் நடவடிக்கை எடுக்கும் பட்சத்திலே தங்களது பணியினை தாங்கள் தொடருவோம் என கருத்து தெரிவித்தனர் ,
தற்போது அந்த பிரதேசத்திலுள்ள மக்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஒரு கொந்தளிப்பான நிலையில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் .இவ்வாறான தேரரின் நடவடிக்கையை தாங்கள் கண்டிப்பதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே பட்டிப்பளை பிரதேசத்தின் பிரதேச செயலார் ஒரு பெண் என்பதும் குறிப்பிடத் தக்கது.