திருகோணமலை கோட்டை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கோட்டை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத குறித்த சடலம் இன்று காலை 6.30 அளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சுமார் 55 முதல் 60 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் மீதான நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதோடு திருகோணமலை பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.