திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

(கதிரவன் )

முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற மனித அவலங்கை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருகோணமலையில் புதன்கிழமை  13.05.2015 மாலை 6.10 மணிக்கு நிகழ்த்தப்பட்டது. கடற்கரை முன்றலில் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கின் முன்னால் இந் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதனை நிகழ்த்தி வைத்தார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை தலைவர் ச.நித்தியானந்தம், நகர சபை உறுப்பினர் சி.நந்தகுமார். தொழிலதிபர் சேஜம்ஸ் சமந்தர் ஆகியோர் தீபங்களை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.