கா.பொ.த உயர் தரத்தில் மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளும் பல்கலைக்கழக தெரிவும்


கல்வியானது அனைவரது வாழ்கைக்கும் மிக அவசியமானதொன்றாகும். அந்த வகையில் இன்றைய காலகட்டத்திலும் இதற்கு முந்தய காலகட்டத்திலும் மாணவர்கள் பல பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்.அதில் முதற் பிரச்சனையாக கற்கை துறைகளை தெரிவு செய்வதில் ஏற்படுகின்றது. உயர்தரத்தில் விஞ்ஞான துறை , கணித துறை, கலைத்துறை ,வர்தக துறையுடன் புதிதாக இணைக்கப்பட்ட தொழில்நுட்பத் துறையுடன் பிரதாணமாக ஐந்து துறைகள் காண்படுகின்றது. இவற்றில் புதிதாக பல பாடத்திட்ங்கள் இணைக்கப்பட்டுள்ளது . கணனி தொடர்பான தொழில் நுட்ப கற்கைநெறிகள் ,கட்டங்கள் தொடர்பாக ,சுற்றுலாத் துறை தொடர்பாக, விவசாசாய துறை சார்பாக என பல்வேறு பிரதான பிரிவிலும் புதிய பாட நெறிகள் இணைக்கப்பட்டுள்ளது.

கா.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கையின் அடுத்த கட்டமாக கா.பொ.த உயர்தரம் செல்கின்றனர்.அவர்கள் கா.பொ.த சாதாரண தரத்தில் பெற்றுக் கொண்ட பெறுபேற்றின் அடிப்படையில் தமக்கான துறையை தெரிவு செய்கின்றனர் .எனினும் அவர்களது விருப்பதிற்கு அப்பால் பெற்றோர் மற்றும் அயலவரின் தூண்டுதல் முக்கியம் பெறுகின்றது. மாணவர்கள்  தமது விருப்பதிற்கு ஏற்ப தன்னால் முடியும் என்ற நம்பிக்கையில் சில துறைகளை தெரிவு செய்கின்றனர் .இதன் போது பெற்றோர் தமது ஆதரவை வழங்கின் அவர்களின் ஆதரவோடு தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் அவர்களை கா.பொ.த உயர் தரத்தில் சிறந்த பெறுபேற்றை பெற வழிவகுக்கும்.

மாணவர்கள் தமக்கு விருப்பமான துறையை தெரிவு செய்வதற்கு புறம்பாக பெற்றோரால் திணிக்கப்படுகின்றனர் .தாம் விரும்பிய துறையை அல்லது இலக்கை அடைய முடியாத பெற்றோர் தமது ஆசைகளையும் கனவுகளையும் மாணவர்கள் மீது திணிக்கின்றனர் .அதுமட்டுமல்லாது அயலவருடன் ஒப்பீட்டு பார்த்தும் .அவர்களின் குழந்தை விட தம் குழந்தை சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்திலும் .அதனால் தாம் பெருமை கொள்ள முடியும் என்றும் மாணவர்களின் மீது  துறை சார் தெரிவு முறைகள் திணிக்கப்படுகின்றது.  ஊதாரணமாக கணித துறையில் கற்ற விரும்பும் மாணவனை தமது விருப்பத்திற்காக விஞ்ஞான பிரிவில் கற்க திணித்தல் மற்றும் வறுமையின் காரணமாக விஞ்ஞான மற்றும் கணித பிரிவை கற்க விரும்பும் மாணவர்களை கலைப் பிரிவில் கற்பிக்க தூண்டுதல் முதலியவற்றை குறிப்பிடலாம்.

இவை மாணவரிடையே கற்றலில் விருப்பமின்மையும் வெறுப்பையும் ஏற்படுத்தும் .இதனால் மன அழுத்தம் அதிகரிக்கும். தாம் விரும்பிய துறை தவிர்ந்து வேறு துறையில் கற்கும் போது கற்றலில்  ஆர்வம் குறைவாக காணப்படும் .இதனால் கற்றல் செயற்பாடுகள் பாதிப்படையும் . இதானால் தாம் தெரிவு செய்த துறையிலுள்ள பாடத்தெரிவிலும் பெரும் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். இவை பெரும்பாலும் கலைத்துறை மற்றும் தொழில்நுட்ப துறை சார்பானவற்றில் ஏற்படுகின்றது. ஊதாரணமாக கலைத் துறையை எடுத்துக் கொண்டால் இவற்றில் பல பிரிவுகளாக பாடப் பிரிவுகள் காணப்படுகின்றன. அவற்றை தெரிவு செய்வதே மாணவர்களுக்கு பிரதான சவாலாக அமைகின்றது. அத்தோடு அப்பிரிவு பாடங்களில் எவை தமது எதிர்கால வாழ்கைக்கு பயன்படும் என்பது தொடர்பாகவும் மாணவர்கள் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளனர் .

மாணவர்கள் தெரிவு பாடத்தின் அடிப்படையில் அவர்களின்  மாவட்ட மற்றும் தேசிய ரீதியான நிலைகளை பின்னடையச் செய்கின்றன. ஏன் எனில் சில பாடங்கள் உயர்வான வெட்டுப்புள்ளியையும் கொண்டவையாக அமைகின்றது மற்றும் மாணவர்கள் பாடத்தெரிவினை மேற்கொள்ளும் போது அழகியற் கற்கை சார்ந்த பாடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டு எடுத்தலாகாது. அதே போல சமயம் மற்றும் நாகரிகம் தொடர்பான பாடங்களும் ஒன்றுக்கு மேற்பட்டு எடுத்தலாகாது .

இவை மாணவர்களின் உயர்தர பெறுபேற்றில் பின்னடைவை ஏற்படுத்தும் . மாணவர்கள் பாடத்தெரிவினை மேற்கொள்ளும் போது தொழில்நுட்பவியல் பாடங்களுக்கான விவசாய தொழில்நுட்பம் ,உணவுத் தொழில்நுட்பம் போன்ற பாடங்களையும் சமூக விஞ்ஞானம் அல்லது பிரயோக சமூக கற்கைகள் , பொருளியல், விவசாய விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களை தெரிவு செய்ய வேண்டும். அவ்வாறே தெரிவு செய்யும் போது அவை மாணவர்களின் எதிர்கால வாழ்கைக்கு பயனுடையதாக அமைவதோடு பல்கலைக்கழக தெரிவிலும் வெட்டுப்புள்ளியை அதிகரித்து பட்டப்படிப்பினை மேற்கொள்ள உதவும் .

கலைத்துறை போன்றே தொழில்நுட்பத்துறையும் காணப்படுகின்றது. தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதாக தொழில்நுட்பத்துறை காணப்படுகின்றது. இவற்றில் குடிசார் தொழில்நுட்பவியல் ,எந்திரவியல் , போன்ற பல தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களும் காணப்படுகின்றது. அத்தோடு விஞ்ஞானத் துறை கணிததுறை, வர்தகம் சார்ந்த அனைத்தும் இணைந்தாக பாடங்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றது. இது புதிதாக   அறிமுகப்படுத்தப்பட்டமையால்  அவை பற்றிய  பூரண அறிவு அதாவது அவற்றை கற்பதனால் கிடைக்கும் பயன் எதிர்கால வாழ்விற்கு அவை எந்தளவுக்கு பயன்பாடுடையதாக இருக்கும் போன்ற விடயங்கள் பலரும் அறியாதாக உள்ளமையால் இவை பாடத்தெரிவில் சிக்கலை தோற்றுவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளில் உயர்தரத்திற்கான பாடங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, பிரத்தியேக வகுப்பிலே அதிகம் தங்கியிருத்தல் போன்றவற்றையும் உயர்தர மாணவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனையாக காணப்படுகின்றது. கணித துறை மற்றும் விஞ்ஞான துறையைத் தெரிவு செய்யும் மாணவர்களுக்கு பயிற்சியே அதிகம் தேவைப்படுகின்றது. அது மட்டுமல்லாது அவை இலகுவில் புரிந்து கொள்ள முடியாத பாடங்கள் என்பதால் ஆசிரியரின் திறமையான கற்பித்தல் முறைகள் அவசியமாகின்றது. ஆகையால் ஆசிரியர் பற்றாக் குறையாக காணப்படின் அவை மாணவர்களின் கல்வியை பாதிக்க கூடும், மற்றும் ஆசிரியர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் போது அந்த இடத்திற்கு மற்றுமொரு ஆசிரியர் வர காலதாமதம் ஏற்படின் மாணவர்களின் கல்வி பாதிப்படையும்
தற்காலத்தில் மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளுக்கு பாடசாலைகளை விட பிரத்தியேக வகுப்புகளையே  அதிகம் சார்ந்துள்ளனர் .குறிப்பாக கணிதத்துறை  விஞ்ஞானத்துறை போன்ற துறைகளை தெரிவு செய்த மாணவர்களுக்கு இது ஒரு சிக்கலாக அமைகின்றது. பிரத்தியேக வகுப்புகளுக்கு கட்டணம் உயர்வாக அமைவதால் பொருளாதார வசதி குன்றிய மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கு செல்ல முடியாமற் போவதால் அவர்களின் கற்றல் பின்னடைகின்றது. எனினும் ஆர்வமுள்ள மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கு செல்லாது பாடசாலைக் கல்வியை மட்டுமே கொண்டு சிறந்த பெறுபேறுகளை பெறுவதுமுண்டு.

இவ்வாறாக கா.பொ .த உயர் தரத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் சில பிரச்சனைகளால் அவர்களின் இறுதிப் பெறுபேறுகள் பின்னடைவை ஏற்படுத்தி அவை மாணவர்களின் பல்கலைக்கழக தெரிவை தவிர்க்கின்றது. அதுமட்டுமல்லாது மாணவர்களிடத்தே ஏற்படும் விரக்திகளும் அவர்களின் கல்வியை பின்னடையச்செய்து பெறுபேற்றினை பாதிக்கின்றது. இவ்வாறான பிரச்சனைகளை தவிர்த்து சிறந்த பெறுபேற்றினை பெற்ற மாணவர்கள் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சனையாக பல்கலைக்கழகத்தில் தாம் தொடரவிருக்கும் பட்டப்படிப்பினை தெரிவு செய்வதாகும். தாம் கா.பொ.த  உயர்தரத்தில் தேர்வு செய்த பாடத்தொகுதி தாம் பெற்ற பெறுபேறு போன்றவற்றை கொண்டு தமக்கு ஏற்ற துறையை தேர்வு செய்தலாகும.;
எனவே கா.பொ.த உயர் தரத்தில்  துறையையும் அத்துறைசார் பாடங்களையும் தெரிவு செய்யும்போது விருப்பத்துடனும் தமக்கு எதிர்காலத்தில் பயன்படக்கூடியதுமான துறையை தேர்வு செய்து கற்பதோடு பல்கலைக்கழக தேர்வு தொடர்பான விடயங்களையும் அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும்.அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும்  ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்க வேண்டும்

நா.சசிதா
கல்வியல் சிறப்பு கற்கை  
இரண்டாம்வருடம் 
கிழக்கு பல்கலைக்கழகம்