தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம்: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.



இதனால் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியமெனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 19 ஆயிரத்து 578 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் ஜனவரி மாதமே அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக உயிர்கொல்லி தொற்று நோயான டெங்கு பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால் மக்கள் தமது சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் தொற்று நோய் தடுப்பு பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.