ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு நடைபவனி


(கதிரவன்)
தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவின் ஒர் நிகழ்வாக நடைபவனி ஞாயிற்றுக்கிழமை 2018.06.03  பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.  திருமலை கண்டி வீதி 13வது மைல் கல் சாமிமலை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து அதிபர் கே.யோகானந்தம் தலைமையில் பவனி இடம்பெற்றது.

கிழக்கு மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.மனோகரன், உதவி அரசாங்க அதிபர் எஸ்.பிரதீபன், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் என் விஜேந்திரன், மற்றும் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டர்.

நடைபவனி பட்டிமேடு வழியாக வந்தபோது இ.கி.மி.சாரதா வித்தியாலய ஆரம்ப பிரிவு பாண்டு வாத்திய குழுவினர் பட்டிமேடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து தமது பாடசாலை வரை பவனியில் வந்தவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

நடைபவனி பட்டிமேடு. கூட்டாம்புளி, கரைச்சித்திடல், வர்ணமேடு, முள்ளியடி,நடுப்பிரப்பன்திடல். நாயனார் திடல், கொவிலடி வழியாக ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்தை வந்தடைந்தது.