நான்கு நிறுவனங்களில் நுண்கடன்! மனைவி முடியாது என கூறியதால் தூக்கில் தொங்கிய குடும்பஸ்த்தர்! மட்டக்களப்பில் சம்பவம்!மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் குடுபஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவடிவேம்பு சம்பந்தர் வீதியை சேர்ந்த 26 வயதுடைய மேகராசா யோகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உந்துருளி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்றுத்தருமாறு மனைவிடம் கோரியுள்ளார்.

ஏற்கனவே நான்கு நிறுவனங்களில் நுண்கடன் பெற்றுள்ளமையினால் மேலும் கடன் பெற்றுக்கொடுக்க தன்னால் முடியாது என மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன்போது கோபமடைந்த குறித்த நபர் தனது அறைக்கு சென்று கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள குறித்த நபரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.