பல சர்வதேச விருதுகளை பெற்ற கிழக்கிழங்கையின் சினிமா படைப்பாளன்



(சிவம்)

கிழக்கிழங்கையின் மட்டக்களப்பை சேர்ந்த ஜெரோஷன் (Jeroshan) என்ற படைப்பாளனின் படைப்புக்கள்.

மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட Jacob Luke Jeroshan  ,    Bad-Dot Studios International Independent Film Makers என்ற பெயரில் 2012 ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி தனது நண்பர்களுடன் இணைந்து இதுரை   7 குருந்திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சினிமா இயக்கம் (Degree in Film Direction) தொடர்பான தனது பட்டப்படிப்பை  தற்போது சிங்கப்பூரில் மேற்கொண்டு வரும் ஜெரோஷன் தனது முதலாவது படைப்பாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பானமனிதம்என்ற  குறும்படத்தை இயக்கியிருந்தார் 

Chapter 26 (இலஞ்சம்),  சிட்சை (பெண்கள் துஷ்பிரயோகமும் அதன் தண்டனையும்),  Missing (போரினால் காணாமல் ஆக்கப்பட்டோர்), அஹ்ரினை (குரூரமான ஒரு கொடூரனின் கதை),  Money Mug (மாயாஜால கோப்பை), Osmodeus (வாழ்கை இரண்டாவதாக வாய்ப்பு கொடுத்த கொடூரனின் கதை) என்ற படைப்புக்களை படைத்துள்ளார்.

இதில் Missing எனும் குருந்திரைப்படம் மட்டு மண்ணிலிருந்து வெளியான முதலாவது எனிமேஷன் குருந்திரைப்படமாகும்.  இது இலங்கையில் தேசிய விருது பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவரின் மணிதம், இரண்டு உள்நாட்டு விருதுகளையும், சிட்சை மூன்று உள்நாட்டு விருதுகளையும் பெற்றுள்ளது.

சமீபத்தில் உருவாக்கிய படமான ‘Osmodeus’ என்ற படம் இதுவரை 6 சர்வதேச விருதுகளைப்பெற்றது மட்டுமல்லாது  நடந்து முடிந்த France நாட்டின் திரையுலக பிரம்மாண்ட கொண்டாட்டமான Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.  உலகில் குருந்திரைப்படங்களுக்கான மிகவும் பெருமதிவாய்த இக்காட்சிபடுத்தலுக்கு எமது மண்ணிலிருந்து சென்ற ஒரு கலைஞனின் படைப்பு தெரிவு செய்யப்பட்டமை எமது மண்ணுக்கு பெருமையாகும்.
கடந்த மாதம் நடைபெற்ற இவ்விழாவிற்கு இப்படத்தின் இயக்குனர் ஜெரோஷன் உடன் இணைந்து இப்படத்தின் ஒளிப்பதிவாளர் தர்ஷன் நந்தகுமாரும் சென்றிருந்தார். அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் சிங்கப்பூரின் புரஜெக்டர் திரையரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளது   
இவ்விழாவிற்கு Bad-Dot Studios International Independent Film Makers யின் அனைத்து தயாரிப்புகளின் VFX மற்றும் இப்படத்தின் உதவி இயக்குனராவும் கடமையாற்றிய R. கேனுஜன் உம் ஜெரோஷனும் இணைந்து பங்குபற்ற உள்ளனர்.