புதுக்குடியிருப்பு இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


(J.ஜிது)
திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார தெற்கு அபிவிருத்தி அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற புதுக்குடியிருப்பு இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த 2017ம் வருடம் ஜூலை – டிசம்பர் வரைக்குமான ஆறுமாத பயிற்சியை நிறைவுசெய்த முழுநேர மற்றும் பகுதிநேர 110 பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு 02.06.2018 திகதி கிரான்குளம் சீ மூன் விடுதி மண்டபத்தில்  புதுக்குடியிருப்பு நிலையப் பொறுப்பதிகாரி N.குகதாஸ் தலமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் முதன்மை அதிதியாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் G.கருணாகரம், தலமைக் காரியாலயத்திலிருந்து வருகை தந்திருந்த பரீட்சை மற்றும் மதிப்பீட்டுப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஜகத் லியனக்கே,

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சிசிரகுமார ஆகியோரும் விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் A.ஹமீர்,  கிழக்கு மாகாண நிருவாக உத்தியோகத்தர் தியாகராஜா, புதுக்கடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர் வே.தட்சணாமூர்த்தி, 

கிழக்கு மாகாண கணக்காளர் தேவிகா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி J.கலாராணி, திருமதி A.நிசாந்தி, சாய்ந்தமருது பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி லத்தீப் மற்றும்  இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.