மயிலம்பாவெளியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு !!


ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலம்பாவெளி கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலம்பாவெளிக் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதுடைய தயாநிதி வசந்தகுமார் எனும் குடும்பப் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

செங்கலடியிலுள்ள நகைக் கடை ஒன்றில் கணக்காளராக இவர் வேலை பார்த்து வந்துள்ளதோடு இவருக்கு 8 ஆம் தரத்தில் கற்கும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.