சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சர்வ சமயச் சொற்பொழிவு: 125வது ஆண்டு ஞாபகார்த்த விழா இன்று மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில்

சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களை பின்பற்றுவது ஒன்றே இன்று எம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு.

ஆம், 1897 செப்டெம்பர் 11ம் நாள் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஏற்பாடாகியிருந்த சர்வ சமயப் பேரவையில் வீர கர்ஜனை புரிந்து உலகத்தையே வேதாந்தத் தத்துவத்தின் பக்கம் ஈர்த்தவர் சுவாமி விவேகானந்தர்.

125வது ஆண்டு ஞாபகார்த்த விழாவாக இன்று உலக நாடுகளில் இருக்கின்ற  இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இராமகிருஷ்ண மடங்களில் கொண்டாடப்படுகிறது. 

மட்டக்களபிலும் இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் தலைமையில் சிறப்புச் சொற்பொழிவுகளுடன் கொண்டாடப்படவிருக்கின்றது. 

இன்று பிற்பகல் 4.00 மணிக்கு சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின்; சிகாகோ சர்வ சமயச் சொற்பொழிவு: 125வது ஆண்டு ஞாபகார்த்த விழா ஆரம்பமாகவிருக்கின்றது. 

கிழக்கு மாகாணத்தின் அதிசிறந்த சொற்பொழிவாளர்களான திருமதி சுபா சக்கரவர்த்தி மற்றும் திருமதி. இந்திராணி புஷ்பராஜா ஆகியோர் முறையே "சுவாமி விவேகானந்தர் கண்ட மத நல்லிணக்கம்" மற்றும் "அன்றாட வாழ்வில் வேதாந்தம்" எனும் தலைப்புகளில் சிறப்புரையாற்றவுள்ளனர். நிகழ்விற்கு வலிமை சேர்க்க ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்கள் தலைமையுரை ஆற்றுவார். விழாவினை மெருகூட்ட கலை நிகழ்வுகளும் அரங்கேற இருக்கின்றன.  எல்லாவற்றிற்கும் மேலாக ' சிகாகோ சொற்பொழிவு' சிறப்புத் திரைப்படமும் காண்பிக்கப்படவுள்ளது.

அனைவரும் இந்த மகத்தான நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தகவல்
இராமகிருஷ்ண மிஷன் பழைய மாணவர்கள்