மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 5 ஆம் தர மாணவர்களுக்கான வழிகாட்டல் வகுப்புக்கள் ஆரம்பம் !!



கல்வி, கலை, பண்பாடுகள் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி ஒன்றியத்தின் அனுசரணையில் தரம் 5 (2019) மாணவர்களுக்கான வழிகாட்டல் வகுப்புக்கள் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் வழிகாட்டலின் கீழ் முற்று முழுதாக இலவசமாக நடாத்தப்படும் இவ் வகுப்புக்கள் 2019 ஆம் ஆண்டில் புலமைப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ் வருடம் கல்லடி, உப்போடை, நொச்சிமுனை, நாவற்குடா, மாணவர்களுடன் தாழங்குடா, மாவிலங்கந்துறை, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

குறித்த செயற்திட்டத்தில் இணைய விரும்பிய மாணவர்களுக்கான அனுமதிப் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்லடி கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS), தாழங்குடா ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயம், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் மற்றும் கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம் என்பனவற்றில் நடாத்தப்பட்டது.

இப் பரீசைக்கு 300 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.