பெரிய கல்லாற்றில் தலைமைத்துவ மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமான பயிற்சிப்பட்டறை

ரவிப்ரியா

பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலய மண்டபத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு பெரியகல்லாறு பட்டதாரிகள் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகமும் இணைந்து, மேற்கொண்ட தலைமைத்துவ மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமான பயிற்சிப்பட்றை 9ந்திகதி சனியன்று நடைபெற்றது. பிரதம விருந்தினராக பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ர.விஜிதா கலந்து கொண்டனர் ; வளவாளர்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற வளவாளர்களாக ஜே. சிறிபிரதீப், எம்.றொவின்சன். ஐ.மிறொஜன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை நேர்த்தியாகச் செய்தனர்.

இவர்களுக்கு பயிற்சி ஆரம்பத்திலேயே மனதை ஒருநிலைப்படுத்தும் தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது சிறப்பம்சமாகும். மாணவர்களுக்கான ஒற்றுமையும் நல்லிணக்கமும் சம்பந்தமான பயிற்சிப்பட்டறையில் மென்மையான தொடர்பாடலின் அவசியம் குறித்து தெளிவான விளக்கங்கள் பகிரப்பட்டன. வன்மறையற்ற தொடர்பாடல் குறித்தான வீடியோ காட்சிகளும் காண்பிக்கப்படட்டன.

தலைமைத்துவ பயிற்சி நெறி சம்பந்தமாக 6 உப தலைப்பக்களின் கீழ் குறிப்பாக நேர முகாமைத்துவத்தின் முக்கியம் பற்றியும், பெண் தலைமைத்துவம் பற்றியும்; தெளிவுபடுத்தப்பட்டது.;

க.பொத. உயர்தரம் முடிந்ததும் மாணவர்கள் வாழ்க்கை மற்றும் தொழில் வாய்ப்பு என்ற இரு புதிய அனுபவங்களுக்குள் பிரவேசிக்க வேண்டிய நிலையில் அவர்களை சரியான முறையில் வழிநடத்தினால் மட்டுமே அவர்கள் வாழ்க்கையிலும் வேலை வாய்ப்பிலும் சிறந்த இலக்ககளை அடையமுடுடியும். அதற்கான தயார் படுத்தலாகவே இக் கருத்தரங்கை மேற் கொண்டுள்ளதாக பயிற்சி அறிமுகத்தின் போது ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கமைவாக இறுதிவரை பயிற்சி (முழுநாள்) அமைந்ததாக பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியளர்; தெரிவித்ததுடன் இது தங்களுக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தையும் ,; தேவையான அறிவையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

அத்துடன் பெறுமதிமிக்க பிரதேச செயலாளரின் ஒப்பத்துடன் கூடிய பயிற்சி தொடர்பான சான்றிதழையும் வழங்கிமைத்தமைக்கான தங்களின் நன்றியையும் தெரிவித்துக் கொண் டனர் .

கல்வியில் கண்ணாக இருந்து மாணவர்களுக்கான இரவு நேர இலவச வகுப்புக்களையும், பரீட்சைக்கான தயார் படுதத்தல் கருத்தரங்ககளையும் நீண்டகாலமாக இவ் அமைப்பு  செய்தது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.. முற்றிலும்  ;சமூக நோக்குடன் அர்ப்பணிப்படன் செயற்படும் இவ் அமைப்பு பெற்றோரிடம் செல்வாக்குப் பெற்று வருகின்றது. அதன் இத்தகைய பயற்சிகள் பற்றி அவர்கள் பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இந்த பயிற்சியை ஒழுங்கமைப்பதற்கான மாணவர்களைத் தெரிவு செய்து அம் மாணவர்களின் பெற்றோரை வீடு வீடாகச் சென்று சந்தித்து, இப்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கியது குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டி பாராட்டுத் தெரிவிக்கின்றனர்.

ஏற்பாட்டாளர்களைப் பொறுத்தவரையில் சிலர் பயிற்சியில் கலந்து கொள்ளாததையிட்டு கவலை கொள்ளவே செய்தனர். எனினும் பயிற்சியில் இறுதிவரை 5 பயிற்சியாளர்கள் இருந்தால் கூட பயிற்சியை .இறுதிவரை கொண்டு செல்வோமென அரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட போதும் பயிற்சியாளர்கள் அனைவருமே மாலை வேளையில் அழகிய கடல் சாரலில் தங்கள் எதிர்கால இலட்சியங்களை வெளிப்படுத்தும் வரை அத்தனைபேரும் அக்கறையோடும், உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும பயிற்சியில் பங்கேற்றமையானது ஏற்பாட்டாளளார்களுக்கு முழு வெற்றியாகும்.