போரதீவுப்பற்று பாலையடிவட்டை பொதுச் சந்தை ஆரம்ப விழா



(படுவான்.எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலயடிவட்டை கிராமத்தில் 1990 ஆம் ஆண்டிற்கு முன்பு மூவின மக்களினால் வாராந்த சந்தை நடைபெற்று வந்திருந்தது.

1990 ஆம் ஆண்டு யுத்தம் ஏற்பட்டதன் பின் பொதுச் சந்தை கட்டடம் முற்றாக உடைக்கப்பட்ட நிலையில் இவ் சந்தையானது சுமார் 28 வருட காலமாக இயங்கவில்லை இதன் பிரகாரம்; இச் சந்தையினை மீள கொண்டுவதற்கு பல தடவைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டும் வெற்றி யளிக்கப்படவில்லை.
04.09.2018 ஆம் திகதி பிரதேச செயலகமும் சமுர்த்தி திட்டத்தினாலும் இவ்சந்தையினை ஆரம்மிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளரும் பிரதேச சபையின் தவிசாளரும் மும்முரமாக இச்சந்தையினை ஆரம்பிப்பதற்கு இப்பிரதேச மக்களை ஒன்று திரட்டி இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திப்பொருட்களை கொண்டு இச்சதையினை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு 04.09.2018 சந்தை கட்டட வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வின் போது போரதீவுப்பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்களஇ, சமுர்த்தி தலைமயக முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களஇ; ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்மானம் எடுக்கப்பட்டு எதிர்வரும் (13) திகதி ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படடது.