மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புஅம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் மோட்டார் சைக்கில் விபத்துக்கள்ளான சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்

சம்மாந்துறை சலாம்பள்ளி வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய சின்னலெப்பை நவுஷாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கடந்த 9 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் குறித்த இருவரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்ற போது சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

இதனை தொடர்ந்து இதில் படுகாயமடைந்த ஒருவரை மேலதக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகைச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்