மருந்துப் பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்படலாம்




நாட்டில் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுபாடு ஏற்படும் அவதானம் ஏற்பட்டள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதி கிடைக்காமையே இதற்கான காரணமென, சுகாதார அமைச்சின் செயலாளர் பீ.ஜே.எஸ். குணதிலக தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச மருந்தாக்கட் கூட்டுதாபனத்தின் முன்னாள் தலைவர் பதவி விலகியதன் பின்னர் புதிய தலைவர் ஒருவர் இன்னும் நியமிக்கப்படாததன் காரணமாகவும், மருந்து​களைக் கொள்வனவு செய்வதில் தடையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் மருந்துகளைக் கொள்வனவு செய்யுமாறு, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பீ.ஜே.எஸ். குணதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 3 வருடங்களாக சுகாதாரத்துறையில் இடம்பெறும், முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அவசியம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் மாத்திரம் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான விலைமனு ஊடாக, 700 இலட்ச ரூபாய் நிதிமோசடி ஏற்பட்டுள்ளதெனவும், இது தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ​ஆணைக்குழு ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.