கிழக்கு மாகாணத்தின் முதலாவது வீதி சமிஞ்சை விளக்கு மட்டக்களப்பில் அமையவுள்ளது
மட்டக்களப்பு மாநகருக்குள் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில், மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் தாண்டவன்வெளி சந்தியில் வீதி சமிஞ்சை விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகள்    மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மட்டக்களப்பு மாநரக முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 11 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியையும், புகையிரத நிலைய வீதியையும், அருணகிரி வீதியையும் இணைக்கும் மேற்படி சந்தியானது அதிகமான வீதி விபத்துக்கள் சம்பவிக்கும் இடமாக காணப்படுன்றமை தொடர்பில் போக்குவரத்து பொலிஸாருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் விளைவாக இவ்விடத்தில் வீதி சமிஞ்சை விளக்கினை உடனடியாக நிறுவுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் 5 இடங்களில் இது போன்ற வீதி சமிஞ்சை விளக்குகளை நிறுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவாதாக மாநகர முதல்வர் குறிப்பிட்டார். அதுமட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் முதலாவது வீதி சமிஞ்சை விளக்காகவும் இது பதியப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.