பேருந்தில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற பெண் மரணம்


பேருந்தில் ஏறுவதற்காக ஓடிச் சென்ற பெண், கால் தடுக்கி வீழ்ந்தார். மயக்கமடைந்த பெண் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


மட்டக்களப்பு கதிரவெளி – புதூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் செல்லாச்சி (வயது 63) என்ற 8 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 இவர் வெருகல் பகுதியிலுள்ள தனது மரக்கறித் தோட்டத்திலிருந்து கதிரவெளிக்கு வருவதற்காக தயாரான போது பேருந்து வருவதைக் கண்டு ஓடிச் சென்றுள்ளார்.

அப்போது கால் கல்லில் தடக்கி வீழ்ந்து மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை வாகரை மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் ஏற்கெனவே அவர் உயிர் பிரிந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.