[Photos: Thavaroopan]
தமிழர்களின் கலாச்சாரத்தினை மற்றும் மாணவர்கள் பண்பாடுகள் மத்தியில் பேணிவரும் வகையில் மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தைப்பொங்கல் தின கொண்டாட்டம் மற்றும் மனித விழுமிய தின நிகழ்வு-2019 நிகழ்வானது இம்முறையும் வெகு விமர்சியாக உயர் தேசிய தொழில் நுட்ப நிறுவகத்தின் கல்விசார் இணைப்பாளர் திரு.எஸ்.ஜெயபாலன் தலைமையில் கடந்த 30.01.2019 புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ் விழாவினை சிறப்பிக்கும் முகமாக அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி. நமச்சிவாயம் சத்தியானந்தி மற்றும் மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு.கே.புண்ணியமூர்த்தி மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.
இன் சிறப்பான விழாவினை உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தில் கல்வி பயிலும் கணக்கியல் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா, உயர்தேசிய தகவல் தொழில்நுட்பம் டிப்ளோமா, சுற்றுலா மற்றும் நலனோம்பு முகாமைத்துவம் டிப்ளோமா பாடநெறி மாணவர்களும் மற்றும் விரிவுரையாளர்கள், நிவாகத்தினர் வெகு விமர்சியாகவும், மங்களகரமாகவும் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
மேலும் மாணவர்கள் அனைவரும் கலாசார உடை அணிந்து ஒவ்வொரு துறைசார் மாணவர்களும் தாங்கள் துறைசார் பொங்கல் பொங்கி மற்றும் அழகிய வண்ணக் கோலங்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றினால் அலங்காரங்கள் செய்து விழாவிற்கு சிறப்பூட்டியதுடம் பூஜை நடைபெற்று பொங்கல் விழா நிறைவுற்றது. இந்நிகழ்வில் உயர் தேசிய தொழில்நுட்ப நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.