மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த 25 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு



(க. விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த 25 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டிற்காக ஒன்றினைவோம்" என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை பாடசாலைகளுக்கு கையளிக்கும் நிகழ்வொன்று   நேற்று புதன்கிழமை(10) மாலை 5.00 மணியளவில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஈஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி(காணி),மாகாண மட்ட விளையாட்டு உயர் அதிகாரிகள்,மற்றும் பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஊக்குவித்து பாடசாலைக்கும்,சமூகத்திற்கும் சிறப்பான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும்.பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டுக்களில் ஈடுபடும் ஆர்வம் இருந்தும் அவர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணம் இல்லாமல் கஸ்டப்பட்டார்கள்.

இவ்வாறான விளையாட்டு உபகரணம் இல்லாத பாடசாலைகளை "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" வேலைத்திட்டத்தில் தெரிவு செய்து உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களைச் 25பாடசாலைகளுக்கு இவ்வுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.