பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மற்றுமொருவர் கைது! 8 மில்லியன் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது

கடந்த ஈஸ்டர் தினத்தில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 8 மில்லியன் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுடன் தொடர்படையதாகக் கருதப்படும், புஹாரி மொஹம்மட் ரஃபிஹ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து பயங்கரவாதிக்ளுடன் தொடர்புடையவர்கள் என பலர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் அவர்களின் விசாரணைகளூடாகவும் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.