காத்தான்குடி வாவியில் ஆயுதங்கள் , கைக்குண்டு, வாள், கத்திகள் , தொலைநோக்கு கருவி மீட்பு

எஸ்.அபிவரன்

மட்டக்களப்பு காத்தான்குடி களப்பில் கைவிடப்பட்ட நிலையில் ரி 56 ரக துப்பாக்கி மகசீன் துப்பாக்கி ரவைகள் கைக்குண்டு வாள் கத்திகள், 
தொலை  நோக்கு கருவி என்ப இன்று செவ்வாய்க்கிழமை (14) பகல் இரராணுவத்தினரால் மீட்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்

இராணுவத்தினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (14) காத்தான்குடி முதலாம் பிரிவு வாவிக்கரை வீதியில் எள்ள களப்பு பகுதியை சோதனையிட்டபோது அங்கிருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும் 5 மகசீன் துப்பாக்கி ரவைகள் கைக்குண்டு ஒன்று வாள் 2 கத்திகள், தொலை நோக்கு கருவி ஒன்று உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயதங்களை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.