கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய தாக்குதல் – முக்கிய சந்தேகநபர் காத்தான்குடியில் கைது!


கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக மொஹமட் ஆதம் என்பவர் கைதாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்தநபர் இன்று (புதன்கிழமை) புதிய காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்துவதற்கான வாகனத்தை கொள்வனவு செய்ததுடன், அதன் இருக்கைகளையும் அமைத்துக் கொடுத்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காத்தான்குடியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .