ஜனாதிபதியும் பிரதமரும் முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும் : மட்டக்களப்பில் நாமல்



(சரவணன் , லியோன் )

ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் இந்த பொறுப்பிலிருந்து விடுபட்டிருக்கின்ற ஜனாதிபதியும் பிரதமரும் முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும்.---- பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல்வாதிகள்; சம்பந்தம் என கூறும்போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள். இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது என ஆனால் இந்த பொறுப்பிலிருந்து முதலில் ஜனாதிபதியும் பிரதமரும் விடுபட்டிருக்கின்றனா ஆகவே இருவரும் பதவியில் இருந்து விலகவேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்தார். 


நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (12) மட்டக்களப்பு ஈஸ்லகுன் ஹோட்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பி சந்திரகுமார் மற்றும் மட்டக்களப்பு இணைப்பாளர் டி .ஹரி பிரதாப் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ கலந்துகொண்ட பின்னர்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.


21 ம் திகதி இடம்பெற்ற நாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாடு பூராகவும் மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் உட்பட அரசியல் வாதிகள் அனைவரும் அடுத்த வேலைத்திட்டம் என்ன இது தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது ஆனால் அரசு இன்று தமது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றது 


எனவே எமது கட்சி சார்பாக மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும் இது தொடர்பாக சோதனை மேற்கொள்ளும் முப்படையினருக்கும் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாகவும். 


கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மற்றும் மக்களுடைய வாழ்க்கை தொடர்பாக பார்க்கும்போது சந்தை மூடப்பட்டுள்ளது நகரத்துக்கு மக்கள் வருகின்றார்கள் இல்லை பாடசாலைக்கு மாணவர்கள் செல்லுகின்றார்கள் இல்லை. இவ்வாறான நேரத்தில் பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பாக


இந்த பிரதேசத்திலுள்ள அரசியல் வாதிகளுடனும் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்களுடன் இந்த நேரத்தில் கலந்துரையாட வந்துள்ளோன். 


அரசாங்கம் உட்பட அனைவரும் இனவாதத்துக்குள் அரசியலை செய்ய முற்படுகின்றனர். இந்த நிலமை மாறுபடவேண்டும். மகிந்த ராஜபஷ சிங்கள .தமிழ் . முஸ்லீம். பறங்கியர்கள் உட்பட அனைவரையும் ஒன்றினைத்து அரசியலை நடாத்தியிருந்தார் 


ஆனால் இந்த நிலமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து இந்த விடயத்தை எடுத்துக் கொண்டால்  சில அரசியல் வாதிகள் இதில் சம்மந்தப்பட்பவர்கள் எனவும் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். 


ஜக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனர் வனாத்துவில்லு சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை பிணையில் விடுதலை செய்ய அதிகாரத்திலுள்ள 2 அரசியல் வாதிகள் கதைத்துள்ளதாக கூறுகின்றனர் .


ஆனால் அரசுக்கு இன்று வரைக்கும் அந்த அரசியல் வாதிகளை விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது. அரசியல் வாதிகள் இதில் சம்மந்தம் என கூறும்போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள் இதற்கு தொடதர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது என


எனவே ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் இந்த பொறுப்பிலிருந்து முதலில் ஜனாதிபதியும் பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர் எனவே ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் இருந்து விலகவேண்டும்.


இந்த விடயம் தொடர்பாக 2 வருடங்களுக்கு முன்பே ஜனாதிபதி அறிந்திருந்தாள் அதற்கு முதல் ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும். அதேவேளை அவர்கள் இருவரும் தமது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளதை விடுத்து மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்க முற்படுகின்றனர். 


உத்தியோகத்தர்களுக்கு தண்டனை கொடுப்பதை விடுத்து அது மேல் இருந்து கீழ் வரவேண்டும் இது தொட்பாக அரசியல் வாதிகள் கேள்வி கேட்கவேண்டும் ஆனால் ஜனாதிபதி பிரதமரும் இன்று கேட்காதவர்கள் போல இருக்கின்றனர். 
எனவே இப்படியாயின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தமிழ், , சிங்கள , முஸ்லீம், பறங்கியர் என அனைவரும் பொலிசாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உதவவேண்டும் .


மட்டக்களப்பு புனானையில் அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகம் தொடர்பாக நான் செல்ல வேண்டியதல்ல கிழக்கு ஆளுநர் ஏ.எல். எம். ஹிஸ்புல்லா முன்வந்து ஊடகங்களில் அறிக்கை கொடுத்து யார் யார் அனுமதி தந்தது உதவி வழங்கியது என ஆனால் எல்லாப் பிரச்சனைகளையும் போல இந்த பிரச்சனையையும் மகிந்த ராஜபஷ கணக்கில் போட முயற்சிக்கின்றனர். 


இந்த நேரத்தில் விரலை சுட்டி காட்டுவதால் இந்த பிரச்சனைக்கு தீர்வு வரப்போவதில்லை மகிந்தவை ஏசிக் கொண்டு நாட்டு மக்களை பாதுகாக்க முடியாது இதை விளங்கிக் கொள்ள வேண்டும் 


அவர்கள் குற்றத்தை சொல்வதை விடுத்து எங்கு பிழை செய்துள்ளனர் என தேடி சரி செய்து மக்களை பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்கள் கூறுகின்றனர் 2 வருடத்துக்கு முன் புலனாய்வு பிரிவினர் அவருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதாக எனவே இது தொடர்பாக சட்டத்தை கையில் எடுப்பேன் என கூறும் முன் தனக்கு நீதியை சரியாக செய்வதாக இருந்தால் நல்லது. என்றார்