கண்காணிப்பு குழுவொன்றை நியமித்துள்ள தேர்தல்கள் செயலகம்



தேர்தல் வாக்குப் படிவங்கள் உரிய முறையில் வீடுகளுக்கு வழங்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய, தேர்தல்கள் செயலகம் ஊடாக கண்காணிப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குப் படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கும் நடவடிக்கையானது, கிராம உத்தியோகத்தர் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன்போது சில கிராம உத்தியோகத்தர்களின் நடவடிக்கைத் தொடர்பில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

விசேடமாக சில பீ.சீ. படிவங்கள் வீடுகளுக்கு விநியோகிக்காமல், கிராம உத்தியோகத்தர்களே அதனை பூர்த்தி செய்து, தேர்தல்கள் செயலகத்துக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனை கவனத்தில் கொண்டு, இந்த விடயம் தொடர்பில் ஆராய, உதவி தேர்தல்கள் ஆணையாளரின் தலைமையில், கண்காணப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே பீ.சீ. படிவங்களை எதிர்வரும் 14ஆம் திகதியிலிருந்து மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் கையளிக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

எனவே இன்று வரை விண்ணப்பப் படிவங்கள் கிடைக்காதவர்கள் இதனை கிராம உத்தியோகத்தர் மூலமாகப் பெற்றுக்​கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.