நிலக்கடலை அறுவடை விழா
மு.கோகிலன்

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பூலாக்காடு கிராமத்தில் இன்று திங்கள் கிழமை நிலக்கடலை அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

பூலாக்காடு மண்முத்து விடிவெள்ளி மறுவயற் பயிர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் நி.மனோகரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.யோகராசா,பிரதேச சபை உறுப்பினர் கே.பகிதரன்,உலகதரிசன திட்டமிடல் உத்தியோகஸ்த்தர் என்.ரமேஸ்,விவசாய போதனாசிரியர் கே.நிஷாந்தன். கிராமசேவை உத்தியோகஸ்த்தர் எஸ்.குரு ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். பூலாக்காடு,பெண்டுகள்சேனை, பட்டியடிவெளி,பெரியவேதம்,கானாந்தனை போன்ற இடங்களில் சுமார் 150 ஏக்கரில் இவ் மேட்டு நில பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.