கொழும்பில் (BMICHஇல்) உயர் சர்வதேச கற்கை நிறுவகத்தினால் நடைபெற உள்ள 2025ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா




BMICH - கொழும்பில் உயர் சர்வதேச கற்கை நிறுவகத்தினால் நடைபெற உள்ள 2025 ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் பெற்ற, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இளநிலை தமிழியல் சிறப்பு கலைமாணி (Bachelor of Arts in Tamilology) கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான, பட்டம் (Degree), மேற் பட்டயம் (Higher Diploma) மற்றும் பட்டயம் (Diploma) சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், டெக்ஸ் இவன் (DEX Events) நிர்வகிப்பில், 2025 ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா உயர் சர்வதேச கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் Dr. தம்பிப்பிள்ளை துஷ்யந்தன் அவர்களின் தலைமையில், எதிர்வரும் 22.11.2025 நடைபெற உள்ளது.

உயர் சர்வதேச கற்கை நிறுவகத்தின் ஊடாக (HIEI of SriLanka) இளநிலை (தமிழ்), முதுநிலை (தமிழ்), ஆசிரியர் பட்டய பயிற்சி போன்ற கற்கை நெறிக்கள் நடைபெறுகிறது.

இற் கற்கை நிறுவகத்திற்கு 2025 ம் ஆண்டிற்கான BWIO - USA நிறுவனத்தினால் "Fastest Growing Educational Institute of the Year - Platinum Award" சர்வதேச விருதும், "Highly Student Focused Educational Institute of the Year - Lanka Business Award" தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.