ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய அடிப்படை வாதிகள் நிறுத்து, அல்லது கொட்டத்தை அடக்க வேண்டிவரும்(கனகராசா சரவணன்)

கிழக்கில் முன்னாள் கிழக்கு ஆளுனர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா போன்ற இஸ்லாமிய அடிப்படை வாதிகள் எமது தமிழர்களுடைய நிலங்களை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர். அரபு தேசிய வாதத்தை இந்த மண்ணிலே விதைப்பதை நாங்கள் பார்த்துக் கொள்ளப் போவது கிடையாது எனவே ஹிஸ்புல்லா உங்களுடைய கொட்டத்தை அடக்குங்கள் அல்லது வடக்கு கிழக்கு மக்கள் கொந்தளித்து உங்களுடைய கொட்டத்தை அடக்கவேண்டிவரும். என சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் அரசியல் கைதிகளை விமுதலை வேண்டி தமிழ் மக்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை கவனயீர்பு ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது இதில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்

போராட்டத்திற்கு உரம் சோர்த்த மட்டக்களப்பு மண்ணில் இருந்து அரசியல் கைதி சகாதேவனின் படுகொலைக்கு நீதிவேண்டி அணிதிரண்டுள்ளோம். அரசியல் கைதியான சகாதேவன் இலங்கை அரசினதும் சிறைச்சாலை நிர்வாகத்தினதும் அசமந்த போக்கினால் உரிய வைத்திய வசதிகள் செய்யப்படாமல் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலையை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம் .

எனவே உடனடியாக தமிழ் அரசியல் கைதிகள் எந்த விதமான நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்படவேண்டும் இது இலங்கையில் நடந்திராத விடயமல்ல நடக்கமுடியாத விடயமும் அல்ல. ஏன் என்றால் 1980 பின் பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக ஆயும் ஏந்தி போராடிய ஜே.வி.பி யினர் இதே அடிப்படையில் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜே. வி.பி யினரை விடுதலை செய்ய முடியும் என்றால் கருணா அம்மான் வெளியிலே சுதந்திரமாக நடமாட முடியும் என்றால். ஏன் இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது?

மட்டக்களப்பு மண்ணுக்கு வருகை தந்துகொண்டிருந்தபோது மட்டக்களப்பு மண்ணிலே வாழந்து கொண்டிருக்கின்ற எங்களுடைய தமிழ் உறவுகள் குமுறிக் கொண்டிருக்கின்றனர். எங்களுடைய தமிழ் உறவுகளின் காணிகளை இஸ்லாமிய அடிப்படை வாதிகள் சூறையாடிக் கொண்டிருக்கின்றனர் இது இன்று மண்ணினுடைய அவலம்.

எனவே இதை நாங்கள் தொடர அனுமதிக்க முடியாது முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா போன்ற அடிப்படை வாதிகள் எங்களுடைய தமிழ் சகோதர்களுடைய நிலங்களை சூறையாடிக் கொண்டிருக்கின்றனர் கவலைக்குரிய விடயம்

ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா நீதி மன்றத்தில் இருந்த தமிழ் நீதிபதியை மாற்றிவிட்டு ஒரு இஸ்லாமிய நீதிபதியை கொண்டுவந்து எழுதடா தீர்ப்பை என்றேன் எழுதினான் தீர்ப்பை, தமிழ் மக்களை விரட்டினேன் என ஹிஸ்புல்லா கொக்கரிக்கின்றார்

மட்டக்களப்பு மண்ணில் இருந்து ஹிஸ்புல்லாவுக்கு நாங்கள் ஒரு விடயத்தை தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன் உங்களுடைய அடாவடித்தனம் நிறுத்திக் கொள்ளுங்கள் இனியும் தமிழ் மக்களின் காணிகளை நீங்கள் சூறையாட வெளிக்கிட்டால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இனைந்து கொந்தளிப்பார்கள்

உமது அரபு தேசிய வாதத்தை இந்த மண்ணிலே விதைப்பதை நாங்கள் பார்த்துக் கொள்ளப் போவது கிடையாது உங்களுடைய கொட்டத்தை அடக்குங்கள் அல்லது வடக்கு கிழக்கு மக்கள் கொந்தளித்து உங்களுடைய கொட்டத்தை அடக்கவேண்டிவரும். என இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுத்து இஸ்லாமிய சகோதரர்களை நாங்கள் இருகரம் கூப்பி அழைக்கின்றோம.;

எங்களோடு சேர்ந்து இணைந்த வடக்கு கிழக்கிற்காக குரல் கொடுக்க. அந்த இணைந்த வடக்கு கிழக்கு அமையப் பெறுமாயிருந்தால் நிச்சயமாக அந்த வடக்கு கிழக்கில் இஸ்லாமிய சகோதர்களுக்கு ஒரு அலகு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என மட்டு மண்ணில் இருந்து அரசுக்கு அறைகூவல் விடுக்கின்றோம் என்றார்..