கல்முனை பகுதியில் இரு வேறு தற்கொலை மரணங்கள்(பாறுக் ஷிஹான்)


 கல்முனை பகுதியில் இரு வேறு தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை ஜீ.பி.எஸ் வீதியில் வதியும் 22 வயதுடைய முத்துலிங்கம் ஜெகநாத் என்ற இளைஞன் தனது வீட்டின் சாமி அறை கூரையில் சேலை துணி ஒன்றின் உதவியுடன் தூக்கில் இட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸாரும் அம்பாறை தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய்க்கிழமை (9) காலை சடலமாக மீட்கப்பட்ட இவ்விளைஞன் காதல் பிரச்சினை காரணமாக இவ்விபரீத முடிவினை எடுத்துள்ளதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கடற்தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.இவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் ஆவர்.

மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதே வேளை கல்முனை சேனைக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீட்டுமுற்றத்திலுள்ள மரத்திலே திங்கட்கிழமை(8) குறித்தநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையும் 53 வயதுடையவருமான கந்தையா யோகலிங்கம் எனும் நபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

குடும்பத்தகராறு காரணமாக குறித்த நபர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தற்போது உடற்கூற்று ஆய்வுக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.