மருதமுனையுடன் இணைந்த பிரதேச செயலகம் -நற்பிட்டிமுனை மக்களும் பேராதரவு(பாறுக் ஷிஹான்) 

கல்முனை மாநகர பகுதியில் அமைந்துள்ள மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகத்தில் நற்பிட்டிமுனை கிராமம் உள்வாங்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலக அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மருதமுனை மக்களினால் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது மருதமுனை பகுதியில் உள்ள சகல ஜும்மா பள்ளிவாசல் முன்றலிலும் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பமானதுடன் பிரதேச மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்குபற்றி அருகில் உள்ள கிராமங்களான பெரிய நீலாவணை முஸ்லீம் பிரிவு பாண்டிருப்பு முஸ்லீம் பரிவு நற்பிட்டிமுனை பகுதிகளை உள்வாங்கி குறித்த பிரதேச செயலகத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதனை அடிப்படையாக கொண்டு வெள்ளிக்கிழமை (2) நற்பிட்டிமுனையில் ஜாமீஊல் ஹிக்மா ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட 3 ஜும்மா பள்ளிவாசல்களில் தொழுகையை தொடர்ந்து இப்பிரதேச செயலகத்திற்கு ஆதரவு தெரிவித்து துண்டுபிரசுரங்கள் வெளிடப்பட்டு மக்கள் ஆதரவு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக நாட்டில் பேசும் பொருளாக மாறிய கல்முனை விவகாரம் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் இன்று பல்வேறு பிரிவுகளை கூறி நிற்கின்றன இதன் தொடர்ச்சியாக கல்முனையில் வாழும் தமிழர்கள் வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி பல்வேறு போராட்டங்கள் அரசியல் முன்னெடுப்புகளை முன்னெடுத்து வரும் அதே வேளையில் மருதமுனை நற்பட்டிமுனை முஸ்லிம் மக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து செயற்பட முடியாது என தங்களுக்கான புதிய நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்க புதிய ஒரு செயலகத்தில் கோரி நிற்கின்றனர்.

புதிய பிரதேச செயலகத்தை கோரி நிற்கும் மருதமுனை மக்களுடன் நற்பட்டிமுனை மக்களை இணைந்து செயற்பட போவதாக இன்று துண்டுப் பிரசுரங்கள் மூலமும் பள்ளிவாசல் ஜும்மாப் பிரசங்கங்கள் மூலமும் தங்களுக்கான எண்ணத்தினை அரசின் காதுகளுக்கு கொண்டுசெல்லப்பட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

மருதமுனை நற்பிட்டிமுனை கிராமங்களிடையே நிர்வாக தொடர்நிலைத்தொடர் திருமணத் தொடர்பு சொந்த தொடர்புகள் இருப்பதாகவும் அவர்களுடைய நற்பட்டிமுனை முஸ்லிம்கள் இணைந்து செயற்படுவதன் மூலம் தங்களது எதிர்கால நிர்வாக செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என வலியுறுத்தி வருகின்றன.

இன்று ஜும்மா தொழுகையின் பின் நற்பட்டிமுனை யிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களும்ஏகமனதாக துண்டுப் பிரசுரங்கள் மூலம் தாங்கள் மருதமுனையுடன் இணைந்து செயற்படுவதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அரசுக்கு தெரியப் படுத்தும் நோக்கோடு துண்டுப் பிரசுரம் மூலம் தெளிவுட்டிவருவதாக கலந்து கொண்ட மக்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன்னர் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களை சந்தித்து முஸ்லிங்களின் பிரச்சினைகள் குறித்து பேசிய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் குழுவினரிடம் மருதமுனை- நற்பட்டிமுனை மக்களின் தேவையாக இருக்கும் இந்த செயலகத்தை உருவாக்க அமைச்சர் வஜிர அபேவர்த்தன உடன்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட உள்ளது.

மேலும் கல்முனை மாநகரில் அண்மைக்காலமாக சூடுபிடித்திருக்கும் சாய்ந்தமருது நகர சபை போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்வு போராட்ட வரிசையில் மருதமுனையிலும் கையெழுத்து போராட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.