அரச முகாமைத்துவ உதவியாளர் பதவிப் பெயர் மாற்றம்!

அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை சேவையாளர்களின் உத்தியோகபூர்வ பதவிப் பெயரை, முகாமைத்துவ சேவை அதிகாரிகள் என பெயர்மாற்றம் செய்ய திட்டமிடப்படவுள்ளது.       


இந்த பதவி பெயர் மாற்றம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அரச மற்றும் மாகாண முகாமைத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற் சங்கத்தின் நிர்வாக குழுஉறுப்பினர் ஸீ.டபிள்யு.விதாரண தெரிவித்தார்.

முகாமைத்துவ உதவியாளர்சேவைகள் ஒன்றிணைந்த தொழிற் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் பலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும், இந்த விடயம்தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார் .